பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார்? பொன் ராதாகிருஷ்ணன் 

 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருப்பதால் கூட்டணியின் சார்பில் தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு சுமூகமான முடிவு கிடைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணியில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளோம்

இந்த தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் போட்டியிட ஏற்பாடுகளை பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web