ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது!
 
ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

தமிழகத்தில் முன்னர் அறிவித்தபடி ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. 234 தொகுதிகளிலும் பதிவானது ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் தற்போது தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை திமுக ஆட்சி பெறும் என்றும் கருத்துக்கணிப்பின் முடிவில் கூறப்பட்டுள்ளது. மேலும் திமுக 170 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.election

மேலும் ஈரோட்டில் மொத்தம் 8 தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஈரோடு மேற்கு தொகுதி திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மொடக்குறிச்சி தொகுதி திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெருந்துறை தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. பவானி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அந்தியூர் தொகுதி கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. கோபி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் களமிறங்கியுள்ளார். மேலும் பவானிசாகர் பகுதியில் திமுகவின் கூட்டணியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.

From around the web