மெரீனாவில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? நீதிமன்றம் கேள்வி

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இருப்பினும் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கப் படவில்லை என்பதும் மெரினா உட்பட ஒரு சில இடங்களில் பொது மக்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொது மக்களை அனுமதிப்பது எப்போது என்பது குறித்து வரும் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என மீனவர் நல அமைப்பு பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் மெரினா கடற்கரையில் மட்டும் பொதுமக்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை மெரினா கடற்கரையில் பொது மக்களை அனுமதிப்பது எப்போது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது. ஆனால் அதே நேரத்தில் பொது மக்களை அனுமதிப்பது குறித்து அரசும் சென்னை மாநகராட்சியின் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை நீதிமன்றத்திடம் வரும் 5-ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web