செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவது எப்போது? பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

 

செம்பரபாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது என்றும் ஏரி திறக்கப்படும் முன் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி என்ற நிலையில் தற்போது 22 அடி நிரம்பிவிட்டது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் எப்போது வேண்டுமானாலும் திறந்து விடலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியபோது செம்பரபாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது என்றும் ஏரி நிரம்பிய பின்னர் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் திறக்கப்படும் என்றும் 2015 ஆம் ஆண்டு நடந்தது போல் வெள்ளம் இந்த ஆண்டு வர வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் 

lake

மேலும் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் பின்னரே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் அவர்கள் கூறியுள்ளார்

இந்த நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இயல்பை விட 40 சதவீதம் குறைவான பருவ மழைதான் பெய்துள்ளது என்றும் பருவமழையால் 1133 இடங்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார் மேலும் 36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்

From around the web