தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? வரும் 28ஆம் தேதி தெரியும்!

 

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது என்பது தெரிந்ததே 

இதனை அடுத்து தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் திறப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் என்பவர் வரும் 28ம் தேதி ஆலோசனை செய்ய உள்ளார் 

காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதி எது என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே செப்டம்பர் 28ஆம் தேதி ஆலோசனை முடிந்த பின்னர் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரலாம் 

ஏற்கனவே நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் அதே தேதியில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது

From around the web