தமிழகம் உள்ப்ட 5 மாநிலங்களில் எக்சிட்போல் வெளியாகுவது எப்போது? 

 
தமிழகம் உள்ப்ட 5 மாநிலங்களில் எக்சிட்போல் வெளியாகுவது எப்போது?

ஒவ்வொரு தேர்தலின் வாக்கு பதிவு நடந்து முடிந்ததும் எக்ஸிட் போல் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிபு வெளியாகும் என்பதும் அந்த கருத்துக் கணிப்பு ஓரளவுக்கு சரியாக இருந்து அதன்படிதான் ஆட்சி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இன்று தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று உள்ளது. இருப்பினும் இன்று எக்ஸிட் போல் வெளியாகவில்லை 

vote

இந்தியாவில் தற்போது தமிழகம் புதுவை உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று உள்ள நிலையில் இன்னும் ஐந்து கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் எட்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர் அன்று இரவு ஏழு முப்பது மணிக்கு மேல்தான் எக்சிட் போல் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளதால் ஏப்ரல் 29ஆம் தேதி ஏழு முப்பது மணிக்கு மேல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web