சட்ட பல்கலைக்கு விண்ணப்பிப்பது எப்போது? முறையான அறிவிப்பு!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் தருவது ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த மாதம் முதல் பொறியியல் மருத்துவம் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்பதும், மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை விண்ணப்பித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சற்று முன் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிப்பது குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன்படி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும் சீர்மிகு சட்டப் பள்ளியில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் முதுநிலை சட்டப் படிப்புகளுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார் 

இதனை அடுத்து சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் மேற்கண்ட குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

From around the web