3 தொகுதிகள் காலி: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறுமா?

தமிழகத்தில் ஏற்கனவே திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள் மரணமடைந்த நிலையில் தற்போது சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்களும் மரணமடைந்துள்ளதால் மொத்தம் மூன்று தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக அதிமுக எம்எல்ஏக்கள் தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுமா? அல்லது பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு தான் இருக்கின்றது என்பதற்காக அப்படியே விடப்படுமா என்பது தேர்தல் ஆணையம் எடுக்கும்
 

3 தொகுதிகள் காலி: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறுமா?

தமிழகத்தில் ஏற்கனவே திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள் மரணமடைந்த நிலையில் தற்போது சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்களும் மரணமடைந்துள்ளதால் மொத்தம் மூன்று தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக அதிமுக எம்எல்ஏக்கள் தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுமா? அல்லது பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு தான் இருக்கின்றது என்பதற்காக அப்படியே விடப்படுமா என்பது தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவில்தான் உள்ளது.

இருப்பினும் இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடந்தால் திமுக இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஏற்கனவே வெற்றிபெற்ற தொகுதிகளில் கூட தோல்வி அடைந்தால் திமுகவில் நிலைமை மோசமாகிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

இதனால் இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வராமல் இருப்பதே நல்லது என திமுக தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது. அப்படியே தேர்தல் நடத்த முன்வந்தாலும் கொரோனாவை காரணம் காட்டி போராட்டம் நடத்தியாவது தேர்தலை நிறுத்திவிட திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது

From around the web