விஜய் எப்போது அரசியலுக்கு வரவேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!

 

தளபதி விஜய்யின் பெயரில் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளான எஸ்ஏ சந்திரசேகர் விஜய் எப்போது அரசியலுக்கு வர வேண்டும் என்பது குறித்து பேட்டியளித்துள்ளார் 

தனது பெயரில் கட்சி ஆரம்பிக்க கூடாது என விஜய் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தற்போது வேறு பெயரில் எஸ்ஏ சந்திரசேகர் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் தனது பேட்டியில் விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என்பதால் தான் இந்த கட்சியை தொடங்கி உள்ளேன். தற்போது விஜய் அரசியலுக்கு வர வேண்டாம். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் 

vijay

ஒரு நடிகனாக வேண்டும் என விஜய் ஆசைப்பட்டதை நான்தான் நிறைவேற்றினேன். அதேபோல் விஜய் அரசியலில் ஈடுபட்டு மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். அந்த ஆசையும் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று எஸ்ஏ சந்திரசேகர் பேட்டியில் கூறியுள்ளார் 
10 ஆண்டுகள் கழித்துதான் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என எஸ்ஏ சந்திரசேகர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web