குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் எப்போது?

 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் ஒன்றரை ஆண்டு முடிந்த பின்னரும் நடக்கவில்லை என்ற நிலையில் வரும் 19ஆம் தேதி குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி தமிழ்நாடு கைத்தறி ஜவுளி சார்நிலை பணி, முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பதவிகளுக்காக தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 16ஆம் தேதியும் கடந்த ஜூலை கடந்த ஆண்டு ஜூலை 29 முதல் 29ம் தேதி வரை நடந்த பள்ளிக்கல்வித்துறை மாவட்ட அதிகாரி பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதியும் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நவம்பர் 7 முதல் 14 ஆம் தேதி வரை தங்களது சான்றிதழ்களை இசேவை மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web