நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் எப்போது?

 
neet

மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 9-ஆம் தேதி முதல் இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவிக்கவில்லை என்றாலும் தேர்வு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டிருந்தது

அதேபோல் இந்த ஆண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட் தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது 

மேலும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நீட் தேர்வு நடத்தப்படுவதால் மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வு நடத்தப்படும் தேர்வு மையங்கள் முழுவதும் கிருமிநாசினிகள் தெளித்து பாதுகாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

மேலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்படும் என்றும் உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழி என இரண்டு வழிகளில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

From around the web