வாட்ஸ்அப் இதுக்கெல்லாம் யூஸ் ஆகுதா!! +2 எக்ஸாம்  வாட்ஸ் அப்ல!!

பன்னிரண்டாம் வகுப்பு அலகு தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகிஉள்ளது!
 
whats app

நம் தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெற்று க்கும். ஆனால் தற்போது மே மாதமே முடிகிற நிலையில் உள்ள போது கூட இந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்னும் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி உள்ளது. மேலும் திமுக சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். அவரிடம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தினந்தோறும் கேள்விகள் எழுந்தன.exam

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்  தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் மாணவர்கள் மாணவிகள் தனியாகவும் இருக்கும் குழு ஏற்படுத்தப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. மேலும் வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் விடைத்தாள் தவிர வேறு எந்த செய்திகள் வீடியோக்களை பதிவிட கூடாது எனவும் எச்சரித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம். மேலும் ஆசிரியர்கள் இந்த விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலமாக திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் வாட்ஸ் அப் குழு மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web