"சரக்கு" என்ற வாட்ஸ்அப் குழு! கம்பி எண்ணும் அட்மின்கள்!உறுப்பினர்களை தேடுதல் வேட்டை!

ஊரடங்கு காலகட்டத்தில் விதியை மீறி சரக்கு விற்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
 
whats app

தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டம் நிலவுகிறது. அதனால் நம் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் காய்கறிகடைகள் போன்றவையும் மூடப்பட்டு வீடுதேடி விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய காலகட்டத்தில் தற்போது நம் மளிகைப் பொருள்களும் வீடு  விற்பனை செய்யப்படுகிறது. இக்கட்டான சூழலில் தமிழகத்தில் அதிக வருமானம் கொடுக்கும் தொழிலாக மதுபான கடைகளும் ஊரடங்கு காலகட்டத்திற்கு பயனளிக்கும் விதமாக மூடப்பட்டுள்ளன.kaithu

இதனை அறிந்த மது பிரியர்கள் ஊரடங்கு காலகட்டத்திற்கு முன்னமே தங்களுக்குத் தேவையான சரக்குகளை வாங்கிக் கொண்டு இருப்பு வைத்துள்ளனர் மேலும் இவற்றை தவறான விற்பனை செய்து வருகின்றனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவ்வப்போது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி அவர்கள் சரக்கு என்ற வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் உரிய ஆதாரத்துடன் கூடிய வாய்ஸ் ரெக்கார்ட் உடன் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் குரூப் அட்மின் கள் ஜனார்த்தனன் சரவணன் இருவரையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் திருப்பத்தூர் அருகேயுள்ள வாணியம்பாடியில் நிகழ்ந்துள்ளது. மேலும் இதில் உள்ள மற்ற நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இத்தகைய கால கட்டத்தில் இவர் இவ்வாறு செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது.

From around the web