தாலிபான்களின் ஃபேஸ்புக்கை அடுத்து வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கம்!

 
whatsapp

ஆப்கானிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு என்று கூறப்படும் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றி உள்ளதை அடுத்து உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன. தாலிபான் அரசை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா பிரதமர் உள்பட பல நாடுகளின் பிரதமர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக அமெரிக்கா தாலிபான்களை தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் அதிரடியாக தாலிபான்களின் கணக்குகள் அனைத்தையும் முடக்கியது என்பதும் அது மட்டுமின்றி அந்த கணக்குகளில் இருந்த பதிவுகள் அனைத்தையும் நீக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் பேஸ்புக்கை அடுத்து தாலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தாலிபான்கள் மற்றும் தாலிபான்களுக்கு ஆதரவான வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கப்படுவதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது 

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டிருந்தாலும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து டுவிட்டர் இயங்கும் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தாலிபான்கள் டுவிட்டர் கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டுகள் இருந்தால் டுவிட்டுகள் நீக்கப்படுவதோடு கணக்குகளும் முடக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

From around the web