எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! ஓபிஎஸ்-இன் பரபரப்ப்பு டுவீட்!
 

 

 அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்றும துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும்  அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசாரமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே விவாதம் நடந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web