மீதமுள்ள 1725 நாட்களில் என்ன செய்வீர்கள்: முக ஸ்டாலினுக்கு அரசியல் விமர்சகர் கேள்வி?

 

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் மக்கள் தங்களுடைய குறைகளை எங்களுக்கு மனுவாக கொடுத்தால் 100 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார் 

எத்தனை மனுக்கள் வந்தாலும் அதனை 100 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

தற்போது அவர் தேர்தல் பிரசார செல்லும் வழிகளில் பலர் தங்களது குறைகளை மனுவாக கூறி வருகின்றனர் என்பதும் அந்த மனுக்களில் உள்ள குறைகள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீர்க்கப்படும் என்று முக ஸ்டாலின் கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

mk stalin

இந்த நிலையில் அரசியல் விமர்சகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை முக ஸ்டாலினுக்கு எழுப்பியுள்ளார். 5 வருடம் அரசு என்பது மொத்தம் சுமார் ஆயிரத்து 825 நாட்கள் இருக்கும். இவற்றில் 100 நாட்களில் நீங்கள் மக்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விட்டீர்கள் என்றால் மீதமுள்ள ஆயிரத்து 725 நாட்களில் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார் 

காமெடியாக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு பல நெட்டிசன்கள் தங்களுடைய பாணியில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web