உயிர் இழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன லாபம்? முதமைச்சர் கேள்வி!!

தமிழகத்தில் கொரோனாவால் 34,914 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,325 பேர் குணம் அடைந்துள்ளனர். மேலும் இதுவரை 307 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு சொல்லும் 307 என்ற இறப்பு எண்ணிக்கையானது பொய்யானது என்றும், சீனாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கையும், உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் மறைக்கப்பட்டதுபோல் தமிழக அரசும் உயிர் இழந்தோர் எண்ணிக்கையினை மறைப்பதாக விமர்சனங்கள் எழுந்தவண்ணமே உள்ளன. தற்போது இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நம் நாட்டில்
 
உயிர் இழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன லாபம்? முதமைச்சர் கேள்வி!!

தமிழகத்தில் கொரோனாவால் 34,914 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,325 பேர் குணம் அடைந்துள்ளனர். மேலும் இதுவரை 307 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு சொல்லும் 307 என்ற இறப்பு எண்ணிக்கையானது பொய்யானது என்றும், சீனாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கையும், உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் மறைக்கப்பட்டதுபோல்  தமிழக அரசும் உயிர் இழந்தோர் எண்ணிக்கையினை மறைப்பதாக விமர்சனங்கள் எழுந்தவண்ணமே உள்ளன.

தற்போது இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நம் நாட்டில் தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்பது உண்மைச் செய்தியே ஆகும்.

உயிர் இழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன லாபம்? முதமைச்சர் கேள்வி!!

மேலும் கொரோனா இறப்பு எண்ணிக்கையினை நாங்கள் மறைப்பதாகக் கூறும் விஷயங்கள் பொய்யானவை, ஏனெனில் இது ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது, மற்றவர்கள் கூறுவதைப்போல் மறைக்கவும் முடியாது. உயிரிழப்புகளை மறைத்தால், மக்கள் மேலும் அஜாக்கிரதையாக செயல்படுவர், அதனால் நாங்கள் அப்படி ஒரு செயலை எந்தநிலையிலும் செய்ய மாட்டோம்.

உண்மையில் அவ்வாறு மறைப்பதால் அரசுக்கு என்ன லாபம் என்று நினைக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை, தமிழகத்தின் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் கடுமையாகப் போராடி கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தி வருகின்றனர். இதனால்தான் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

From around the web