என்னம்மா இந்த மனு? எங்களால் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவு தர முடியாது!!

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவு தர முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது
 
corona

தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. இதனால்  வெளிநாடுகளில் உதவி கோரி வருகிறது. இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு அவை பெரும்பாலான மாநிலங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்திலும் சில தினங்களாக செங்கல்பட்டு பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எடுத்துள்ளது. இதுகுறித்து தற்போது உயர்நீதிமன்றம் அதிரடி தகவலை கூறி உள்ளது.highcourt

அதன்படி செங்கல்பட்டு ஆலையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய மாநில அரசுகள் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஐகோர்ட் கருத்து கூறியுள்ளது. மேலும் தடுப்பூசி உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுகள் முடிவெடுக்கும் என்று உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு எச் எல் எல் பயோடெக் நிறுவனத்தில் உற்பத்தி செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யபட்டது.

 சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனை மதுரையை சேர்ந்த வெர்னிகா மேரி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தடுப்பூசி தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் முதல்வர் அனுப்பியுள்ள நிலையில் நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துவது போல் மனுதாக்கல் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் செங்கல்பட்டு ஆளை செயல்படுத்த தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க தேவையில்லையா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மாநில அரசின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு அவகாசம் வேண்டுமா என்றும் கேள்வி எழுகிறது ஹைகோர்ட்.

From around the web