"மே இரண்டாம் தேதி தான் வாக்குகளை எண்ண வேண்டும்" அதிமுக அமைச்சர்!

தபால் வாக்குகளை மே இரண்டாம் தேதி தான் எண்ண வேண்டும் என்று கூறுகிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!
 
"மே இரண்டாம் தேதி தான் வாக்குகளை எண்ண வேண்டும்" அதிமுக அமைச்சர்!

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஆனது சில தினங்கள் முன்பாக நடைபெற்று முடிந்தது .மேலும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்துள்ளன. மேலும் குறிப்பாக தமிழகத்தின் மிகவும் வலிமையான ஆளுங்கட்சியாக காணப்படும் அதிமுக ஆனது பல்வேறு கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் பலர் தங்கள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதியிலே அதிகம் வேட்பாளராக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

jayakumar

மேலும் அதிமுகவின் சார்பில் எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அதிமுகவின் மற்றுமொரு அமைச்சரான ஜெயக்குமார் சென்னை ராயபுரம் பகுதியில் களமிறங்கியுள்ளார். மேலும் ராயபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார் மேலும் சில தகவல்களையும் கூறியுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் தபால் ஓட்டுகள் மே இரண்டாம் தேதி தான் எண்ண படவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். மேலும் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை மே ஒன்றில் திறக்க கூடாது அதிமுக சார்பில் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் கோரிக்கை மனு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதிமுகவின் கோரிக்கைகளை ஏற்று தகுந்த அறிவுரைகளை வழங்குவதாக தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்.

From around the web