என்னது ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதா! அப்பகுதி மக்களின் நிலை?

டவ் தே புயல் எதிரொலியால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் வட கடலில் 50 அடி தூரம் கடல் உள்வாங்கி உள்ளது!
 
என்னது ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதா! அப்பகுதி மக்களின் நிலை?

தற்போது தமிழகத்திற்கு 5 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காரணம் என்னவெனில் அரபிக் கடலில் புதிதாக டவ் தே என்ற புயல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அவை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆக இருந்து அதன் பின்னர் மண்டலமாக மாறி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.arabian sea

மேலும் தமிழகத்தில் குறிப்பாக தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்து வருகின்றன. ராமேஸ்வரம் பகுதியில் தற்போது கடல் உள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். டவ் தே புயல் எதிரொலியால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் 50 அடி தூரம் கடல் உள்வாங்கி உள்ளது.

ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரத்தில் படகுகளை கரையில் நிறுத்தினர். இன்று காலை தங்கச்சிமடம் ,பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கியதால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தி இருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி நின்றன. ராமேஸ்வரம் பகுதியில் தற்போது சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மிகுந்த அச்சத்தோடு உள்ளனர்.இதனால் ராமேஸ்வரம் மக்களே சுனாமி எதுவும் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர்.

From around the web