மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை என்ன? இரண்டு வாரத்துக்குள் பதில் வேண்டும்;

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளை என்னென்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!
 
cbse

இப்போது நம் நாட்டில் நிலவும் இக்கட்டான காலகட்டத்தில் பல மாநிலங்களில் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு- இன்று ரத்து செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பாக மத்திய பிரதேசம் குஜராத் மாநிலத்தில் நேற்றையதினம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்றும் அதனை ரத்து செய்தது. அம்மாநில அரசு இதற்கு முன்னதாகவே சிபிஎஸ்இ  12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  நம் தமிழகத்திலும் இது குறித்து ஏதேனும் முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் அவை நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்றும் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.superme court

இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் சிபிஎஸ்சி மற்றும் ஐசிஐசி ஆகியவற்றுக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் கையாளும் முறையை என்னென்ன என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவற்றை பற்றி இரண்டு வாரங்களில் சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நம் இந்தியாவில் கொரோனா சூழலில் சிபிஎஸ்சி போன்றவை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்த தேர்வுகளை ரத்து செய்யக்கோரி முன்பே தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க கையாளும் முறைகள் குறித்து இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாநில கல்வி வாரியங்களில் படிக்கும் மாணவர்களின் நலன் குறித்து மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் அனைத்து மாணவர்களும் நலன்களும் பாதுகாக்கப்படும் என்றும் நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

From around the web