கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் சொத்து விவரம் என்ன?

ஹெலிகாப்டர் சகோதரர்களின் சொத்து விவரம் என்ன? ஐகோர்ட் கேள்வி
 
helicopter brothers

தற்போது நம் இந்தியாவில் அதிகமாக கொள்ளை சம்பவம் நிகழ்கிறது.  பல படித்த இளைஞர்கள் கூட இந்த கொலை சம்பவத்தில் ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் நம் தமிழகத்தில் கூட பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதில் சில தினங்கள் முன்பாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்பவர்களின் நூதனமான செயல்முறை தெரியவந்தது.highcourt

தற்போது ஹைகோர்ட் மதுரை கிளை சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி இந்த இந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் சொத்து விவரம் என்ன என்று கேள்வி எழுகின்றது. பண மோசடி வழக்கில் கைதாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பணம் மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றும் ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன என்றும் ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் ஜாமீன் கோரிய மனுவில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இத்தகைய கேள்விகளை முன் வைத்துள்ளது. பல்வேறு நாடுகளில் நிறுவனங்கள் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. இருந்தால் அதன் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.

From around the web