என்னது டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு திட்டமா? ஏப்ரல் 26 வரை!

டெல்லியில் மீண்டும் 7 நாட்களுக்கு ஊரடங்கு  திட்டம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!
 
என்னது டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு திட்டமா? ஏப்ரல் 26 வரை!

மக்கள் மத்தியில் தற்போது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ் .கொரோனா கடந்த ஆண்டில் இந்தியாவில் வர தொடங்கியது இந்தியாவின் தைரியமான முயற்சி எந்த ஒரு நாடும் பின்பற்றாத முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. ஆயினும் சில தினங்களாக இந்த நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்து மக்களை மிகுந்த சோகத்தில் அளிக்கிறது. இந்தியாவில் டெல்லி மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து மிகுந்த வேதனையை அளிக்கிறது.

delhi schools

மேலும் டெல்லியில் சில கட்டுப்பாட்டு விதிகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அதன்படி தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் காலவரையற்ற விடுமுறை அளிப்பதாகவும் கூறினார். மேலும் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்படாது என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறைநாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக கூறினார். மேலும் அதனை தொடர்ந்து நேற்றைய தினமும் அதற்கு முந்தைய தினமும் டெல்லியில் ஊரடங்கு  நடைமுறையில் இருந்தன.

இந்நிலையில் டெல்லி சுற்றுவட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி டெல்லியில் அடுத்த ஏழு நாட்களுக்கு முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லியில் ஏப்ரல் 26 வரை முழு விதிப்பது குறித்த சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெல்லி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்கள் முழு ஊரடங்கும் விதித்தால் அதற்கான ஏற்பாடுகளையும் மிகவும் தீவிரமாக எதிர்பார்த்துள்ளனர். ஆயினும் இது குறித்த உறுதியான தகவல் இன்னும் சில நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web