முதல் இடம் சென்னைக்கு இரண்டாம் இடம் செங்கல்பட்டுக்கு எதுல?

கொரோனா சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டிலும் ஆயிரத்தை தாண்டி மக்களை சோதனையில் தருகிறது!
 
முதல் இடம் சென்னைக்கு இரண்டாம் இடம் செங்கல்பட்டுக்கு எதுல?

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயை கண்ணுக்குத் தெரியாத கிருமி என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் கிருமி கொரோனா. கொரோனா முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் முழுவதும் கொரோனா நோயானது பரவியது. மேலும் கடந்த ஆண்டில் இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி இந்தியாவில் பெரும் முயற்சியால் கொரோனா நோயானது கட்டுப்பாட்டிற்குள் கடந்த ஆண்டின் இறுதியில் வந்த நிலையில் தற்போது சில தினங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் எழுந்து மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

corona

குறிப்பாக மகாராஷ்டிரம் டெல்லி போன்ற பகுதிகளில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களும் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. தமிழக அரசின் சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளன. இருப்பினும் தமிழகத்தில் இந்த நோயானது இன்றைய தினம் 11 ஆயிரத்தை நெருங்கியது.

குறிப்பாக சென்னையில் 3,711 பேருக்கும் செங்கல்பட்டில் 1029 பேருக்கும் கொரோனா நோயானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் கோவையில் 686 பேருக்கும் திருவள்ளூரில் 508 பேருக்கும் சேலத்தில் 383 பேருக்கும் மதுரையில் 366 பேருக்கும் திருச்சியில் 309 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 295 பேருக்கும் திருப்பூரில் இருந்து 216 பேருக்கும் இந்நோயானது கண்டறியப்பட்டுள்ளது.மேலும் திருநெல்வேலியில் 269 பேருக்கும் ஈரோட்டில் 226 பேருக்கும் கொரோனா மற்றும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஒரே நாளில் 17 பேர் கொரோனா நோய்க்காக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

From around the web