தமிழகத்தில் என்னென்ன ஏற்பாடு கூறும் தலைமை தேர்தல் அதிகாரி!

நாளை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பற்றி கூறுகிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து நாளை நடைபெற உள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.23 4 தொகுதிகளிலும் தேர்தல் மிகவும்  தீவிரமாக தேர்தல் வேலைகள் நடைபெற்று வருகிறது .மேலும் தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளையும், உத்தரவுகளையும் விதித்துள்ளது. தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார் சத்யபிரதா சாகு. சில தினங்களுக்கு முன்பு பல தகவல்களை வெளியிட்டார். தற்போது அவர் செய்தியாளர்களிடம் சந்தித்துள்ளார்.

election

செய்தியாளர்களிடம் தமிழகத்தில் நாளை வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூறியுள்ளார். அதன்படி வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றன என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும்,  கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனமும் அவர் கூறினார். மேலும் வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது எனமும் அவர் கூறினார்.

மேலும் அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 936 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் கூறினார். தேர்தல் பணிக்காக 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் அவர் கூறினார். மேலும் பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

From around the web