என்னது கொரோனா  இறப்புக்கும்  லஞ்சமா? உறவினர்கள் கொந்தளிப்பு

கொரோனா நோயாளி உடலை ஒப்படைக்க 19000 லட்சம் லஞ்சம் என புகார் எழுந்துள்ளது!
 
என்னது கொரோனா இறப்புக்கும் லஞ்சமா? உறவினர்கள் கொந்தளிப்பு

தற்போது நாடெங்கும் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா நோய் உள்ளது. இந்த நோய்க்கு எதிராக நாடே மிகவும் போராடி வருகிறது. மேலும் இதற்கு எதிராக பல மாநில அரசுகளும் பல்வேறு தகவல்களையும் உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. கொரோனா நோயின் தாக்கம் அதிகரிப்பதால் மட்டுமின்றி இந்நோயினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுவது வேதனை அளிக்கிறது.corona

கொரோனா உயிரிழப்பு இவ்வளவு பெரிய வேதனை அளித்தாலும் அந்த உயிரிழந்தவர்களின் உடலை வாங்குவதற்கு லஞ்சம் கேட்டு தகவல் அனைவரையும் பதற வைத்துள்ளது. இச் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது தமிழக மக்கள் மனதில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அதுவும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. சென்னையில் வசிக்கும் சாந்தி என்ற 55 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனா   உறுதியானது. அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை பெற்றுவந்த சாந்தி நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

சாந்தியின் உடலை ஒப்படைக்க19 ஆயிரம் லஞ்சம் கேட்டு சுகாதார ஆய்வாளர் நிர்பந்தம் என புகார் எழுந்துள்ளது. மேலும் முதலில் 10 ஆயிரம் பணத்தை உடனடியாக கூகுள் பே மூலம் அனுப்பும்படி சுகாதார அதிகாரிகள் வற்புறுத்துவதால் உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் உறவினர்களை இழந்து தவிப்பவர்கள் லஞ்ச நெருக்கடியால் பரிதவிப்பதாக கூறப்படுகிறது.மேலும் கொரோனாவால் உறவினர்கள் சடலத்தை லஞ்சம் இல்லாமல் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.மேலும் சென்னையில் குறைவால் உயிரிழப்பவர்களின் சடலத்தை ஒப்படைக்க 19 ஆயிரம் லஞ்சம் கேட்பதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

From around the web