என்னது பட்டு ஊர்ல பாம் ஆ? போலீசார் தீவிர விசாரணை!

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு போலீசார் தீவிர விசாரணை!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் அதற்காக பல்வேறு அறிக்கைகளையும், பல்வேறு வேட்பாளர்களையும் ஒவ்வொரு கட்சி சார்பிலும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழகம் தேர்தல் ஆணையமானது ஆங்காங்கே நடக்கும் விதிமீறல்களை கண்டெடுத்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .மேலும் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கு கொண்டுசெல்லப்படும் ஆவணங்கள் இன்றி உள்ள  பணத்தையும் நகைகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

bomb

தமிழகத்தில் பட்டுக்கு பேர் போன ஊர் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவு வருவது காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அதிர்ச்சிகரமான செயல் ஒன்று நிகழ்ந்தது.அது என்னவெனில் காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையத்தில் இன்று வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிகுண்டு பையில் சுருட்டி வைத்து மறைத்து வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றினர். மேலும் அவற்றை செயலிழக்க வைத்தனர். மேலும் இதனை வைத்தவர்கள் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் இச் சம்பவங்கள் அனைத்தும் மக்கள் மனதை மிகவும் பாதிக்கிறது. மேலும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். பேருந்துநிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

From around the web