என்னது வாக்கு இயந்திரம் உள்ள ரூம்ல எலியா?ஒருவேளை சேதம் பண்ணி இருக்குமா?

கோபிசெட்டிபாளையத்தில் வாக்கு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூமில் எலி புகுந்ததாக கூறப்படுகிறது!
 
என்னது வாக்கு இயந்திரம் உள்ள ரூம்ல எலியா?ஒருவேளை சேதம் பண்ணி இருக்குமா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அனைவரும் வரிசையில் நின்று தமது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு பாதுகாக்கும் வண்ணமாக முக கவசம் சனிடைசர் கையுறை போன்றவைகள் வழங்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக நடைபெற்றது. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு மத்தியில் கண்காணிப்புடன் கவனமாக பாதுகாக்கப்படுகிறது.vote

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் வாக்கு எண்ணிக்கை பற்றியும் கண்காணிப்பு கேமரா  பற்றியும் சில தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். மேலும் தற்போது வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்படாமல் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது .மேலும் வாக்கு பதிவு இயந்திரம் உள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டதாக கூறப்படுகிறது.

 தற்போது இந்த கண்காணிப்பு கேமராவில் எலி சிக்கியதாக காணப்படுகிறது .அதன்படி கோபிசெட்டிபாளையத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ரூமில் ஸ்ட்ராங் ரூமில் எலி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபி, பவானிசாகர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் கோபிசெட்டிபாளையத்தில் கலை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த எலியானது உள்ளே சென்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சேதப்படுத்திவிடும் மிகவும் கவனத்துடன் பார்க்கின்றனர்.

From around the web