என்னது பாக்.பிரதமருக்கு கொரோனாவா? பொதுமக்கள் அச்சம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது!
 

தற்பொழுது  அனைவருக்கும் ஆட்கொல்லி நோய் என்று கூறினால் முதலில் நினைவில் வருவது கொரோனா தான். இந்த கொரோனா முதலில் சீனாவில் தோன்றியது .பின்னர் சீனாவில் இருந்து பல நாடுகளுக்கும்  பரவியதாக தகவல் வெளியானது. இந்தியாவிலும் கொரோனா தொடக்கத்திலேயே வந்தது. ஆனால் இந்திய அரசு கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே நாடு முழுவதும்  திட்டத்தினை அமல்படுத்தியது. தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

corona

இதனால் தமிழக அரசானது மாநிலங்களுக்கிடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதன்படி மேலும் பல மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் கொரோனா அதிகமாக இருப்பதால் அப்பகுதியை அம்மாநில அரசு ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தியது.

இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் வேகமாக பரவியதாக தகவல்களை தொடர்ந்து பாகிஸ்தானிலும் கொரோனா வருவதாக  தகவல் வெளியானது. மேலும் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக உள்ள இம்ரான்கான் கொரோனா உறுதியானது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா மிக மோசமாக உள்ளதால் உலகின் பல நாடுகளும் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

From around the web