என்னதான் ஆச்சு கமல் கட்சிக்கு? துணைத்தலைவரை தொடர்ந்து பொதுச்செயலாளரும் விலகல்!!!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பொதுச் செயலாளர் சி கே குமரவேல் விலகியதாக கூறப்படுகிறது
 
mnm

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் புதிது புதிதாக பல கூட்டணி கட்சிகள் களமிறங்கியுள்ளன. அதுவும் குறிப்பாக இந்த சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு இருந்தது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி.  இந்த கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் உள்ளவர் நம் உலகநாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசன். மேலும் இவரது கட்சியில் பெரும்பாலும் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இருந்தார். மேலும் இவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி யில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளார்.kumaravel

இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசன் அதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெறுவார் என எண்ணியிருந்த நிலையில் அவர் போட்டிருந்த கோவை தெற்கு தொகுதியில் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார். இதனை தொடர்ந்து அவரது கட்சியானது உடைந்து காணப்பட்டது. காரணம் என்னவெனில் இக்கட்சியில் இருந்து போட்டியிட்டு இருந்த வேட்பாளர்கள் பலரும் விலகியதாக கூறப்படுகிறது. மேலும் பல நிர்வாகிகள் இந்த கட்சியில் இருந்து விலகியதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன்பாக இக்காட்சியின் துணைத் தலைவரான மகேந்திரன் விலகி இருந்ததாக கூறியிருந்தார். மேலும் இதனால் கட்சிக்குள் சர்ச்சை கிளம்பியது. தற்போது துணைத் தலைவர் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளரும் விலகியதாக தகவல். அதன்படி மநீம கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் கட்சியில் இருந்து விலகி உள்ளார். தனிமனித பிம்பத்தை சார்ந்து இருக்கிற அரசியலை விட மதசார்பற்ற ஜனநாயக அரசியலை விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தோல்விக்கான காரணங்களை இதற்கு முன் கட்சியில் இருந்து விலகியவர்கள் முன் வைத்து விட்டார்கள் என்றும் குமரவேல் கூறியுள்ளார். இதனால் நடிகர் கமலஹாசன் உருவாக்கிய இந்த கட்சியானது நாளுக்கு நாள் வந்து போவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது.

From around the web