பிப்ரவரி 16  முதல் ஃபாஸ்ட் டேக் இல்லையென்றால்? சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை

 

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட் டேக் மூலம் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்திருந்தது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் கட்டண ஏய்ப்பை கட்டுப்படுத்தவும் இந்த முறையை மத்திய அரசு அமல்படுத்தியது 

இதனையடுத்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் நாடு முழுவதும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட் டேக் மூலம் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இருப்பினும் சிலர் ஃபாஸ்ட் டேக்மூலம் கட்டணம் கட்டினாலும் பலர் இன்னும் ஃபாஸ்ட் டேக்வசதியை தங்கள் வாகனங்களில் செய்துகொள்ளவில்லை

toll gate

இதனை அடுத்து தற்போது நெடுஞ்சாலை துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி பிப்ரவரி 16 முதல் ஃபாஸ்ட் டேக் இல்லையென்றால் இரட்டிப்பு கட்டணம் என எச்சரித்துள்ளது. பிப்ரவரி 16 முதல் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் எந்தவொரு வாகனமும் இரட்டிப்பாக கட்டணம் செலுத்த நேரிடும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளதால் ஃபாஸ்ட் டேக் வசதியை இன்னும் செய்யாத வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web