தப்பித்தவறி திமுக தேர்தலில் வெற்றி பெற்றால்? டிடிவி தினகரன் பேட்டி!

 

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறக்கூடாது, ஒருவேளை தப்பித்தவறி வெற்றி பெற்று விட்டால் நாங்கள் இதே இடத்தில் தான் இருப்போம். ஆனால் அதிமுகவினர் எங்கே இருப்பார்கள் என அவர்களுக்கு தெரியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் அவர் இந்த பேட்டியின் போது ’சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து கொண்டுள்ளோம் என்று, சட்டம் அனுமதித்தால் சசிகலா கண்டிப்பாக போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

sasikala

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா ஆறு ஆண்டுகளுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால் அதே நேரத்தில் சிக்கிய மாநிலத்தில் ஊழலுக்கு தண்டனை பெற்ற தமாங் என்பவர் தேர்தலில் போட்டியிட்டார் என்றும் முதல்வராகவும் தேர்தல் ஆணையம் அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை முன்னுதாரணமாகக் கொண்டு சசிகலா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web