உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டால் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர் கூறப்படுகிறது!
 
உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டால் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்தில் உயர் நீதிமன்றம் சென்னையில் உள்ளது. ஆனால் இந்த உயர்நீதிமன்றத்திற்கு தென் தமிழக மக்கள் வந்து வழக்கில் விசாரிப்பது மிகவும் கடினம் என்பதால் அவர்களுக்கு உதவும் வண்ணமாக உயர்நீதிமன்ற கிளை மதுரை மாநகரில் உள்ளது. மேலும் இவ்விரு நீதிமன்றங்களிலும் தினம் தோறும் வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் உண்மைதான். இந்நிலையில் தற்போது ஏற்கனவே உயர்நீதிமன்றம் அறிவித்த உத்தரவுக்கு பின்னரும் ஒரு வழக்கில் மேல்முறையீடு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.girija

இந்த வழக்கானது பல நாட்களாக இழுபறியாக நடைபெறுவது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் தான். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ  உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை தற்போது எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறப்படுகிறது. மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது .தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டது சரி என ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடதக்கது. ஆயினும் சுற்றுச்சூழல் விவகார நிபுணராக நியமிக்க குறைந்தது ஐந்து ஆண்டுகள் சுற்றுசூழல் விவகாரத்தை கையாண்ட அனுபவம் வேண்டுமெனவும் மனுதாரர் தரப்பில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வைத்தியநாதன் நான்காண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே சுற்றுச்சூழல் விவகாரத்தை கண்டுள்ளதால் அவரது நியமனம் விதி மீறல் எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.மேலும் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் தொடர்வது பொது நலனுக்கு குந்தகம் என்றும்  பூவுலகின் நண்பர்கள் கூறுகின்றனர். மேலும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

From around the web