என்னது! 200 ரூபா லஞ்சத்துக்கு நான்காண்டு சிறை தண்டனையா?

2006ஆம் ஆண்டில் 200 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!
 
என்னது! 200 ரூபா லஞ்சத்துக்கு நான்காண்டு சிறை தண்டனையா?

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமையானது தமிழகத்தில் தற்போது நிலவுகிறது. மேலும் எங்கு சென்றாலும் ஊழல் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலை தமிழகத்தில் தற்போது பல பகுதிகளில் காணப்படுகின்றன. ஆயினும் ஒரு சில பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் திறமையான முயற்சியினால் இந்த குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மேலும் இதில் ஈடுபடும் குற்றவாளிகள் யார் என்றும் பாராமல் அவர்களுக்கு தண்டனையும் கிடைக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சான்றிதழ்களை பெறுவதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது வருத்தத்தையும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.lockup

இந்நிலையில் தற்போது  200 ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் 200 ரூபாய் லஞ்சம் பெற்ற 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது மிகுந்த ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 2006ஆம் ஆண்டில் 200 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் விஏஓ நாடிமுத்து நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும் அவர் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 200 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் 2006இல் நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர் அளித்த புகாரின் பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

From around the web