என்ன சொல்றீங்க மூவாயிரம் பேர் தலைமறைவா?எந்தத் தகவலும் தெரியாது!

கர்நாடகாவில் தொற்றுள்ள 3000 பேரை காணவில்லை என்று கூறியுள்ளார் வருவாய்த்துறை அமைச்சர்!
 
என்ன சொல்றீங்க மூவாயிரம் பேர் தலைமறைவா?எந்தத் தகவலும் தெரியாது!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீராக காணப்படுவது காவிரி. இந்த காவிரி நீரானது குடகு மலையிலிருந்து தமிழகத்துக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த காவிரி நீரானது நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து வருகிறது. இந்த கர்நாடகாவில் தற்போது கண்ணுக்கு தெரியாத கிருமியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அங்கே நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்படுவது அம்மாநில மக்களின் வேதனை அளிக்கிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பாக அம்மாநில முதல்வருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது மிகுந்த வருத்தத்தை அளித்தன. சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டது.corona

மேலும் கர்நாடகாவின் தற்போது முதல்வராக உள்ளார் எடியூரப்பா. அவர் சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் பல திட்டங்களையும் விதிமுறைகளையும் கூறியிருந்தார். அதன்படி கர்நாடக மாநிலத்தில் 14 நாட்களுக்கு அதாவது இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார். ஆயினும் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் மளிகைக் கடைகள் போன்றவைகள் இயங்க அனுமதிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் கர்நாடகாவில் மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடகாவில் மேலும் துயரம் ஒன்று நடந்துள்ளது. அதன்படி கர்நாடகாவில் தொற்றுள்ள மூவாயிரம் பேரை காணவில்லை என்று தகவல் வெளியானது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2000 முதல் 3000 பேரை காணவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் கூறியுள்ளார்.மேலும் கொரோனா உறுதியாகி காணாமல்போனவர்களின் செல்போன்கள் துண்டிக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் ஆர் அசோகா தகவல் அளித்துள்ளார். மேலும் வேகமாக பரவும் நிலையில் கொரோனா தொற்றுடன் காணாமல் போனவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது .

இதனால் காணாமல் போன நோயாளிகள் எங்கே சென்றார்கள்? எங்கே உள்ளனர்? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை எனவும் அரசின் சார்பில் கூறப்பட்டது. கர்நாடகாவில் ஒரே நேரத்தில் 3000 நோயாளிகள் காணாமல் போனதால் மேலும் பலருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.

From around the web