ஆகஸ்ட் 1 முதல் என்னென்ன தளர்வுகள்: இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் பரிந்துரை

ஊரடங்கு உத்தரவு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஆகஸ்ட் 1 முதல் அன்லாக் 3.0 ஆரம்பமாகவுள்ளது. இந்த ஒரு மாதத்தில் என்னென்ன தளர்வுகள் தரலாம் என இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை சில பரிந்துரைகளை செய்துள்ளது. வெளிநாட்டினரை இந்தியர்களை அனுமதிக்கலாம். அவர்களிடம் கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் தனிமைப்படுத்துதல் தேவையில்லை வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு அரசு, கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழை வழங்க வேண்டும். இந்த சான்றிதழ்கள் மற்ற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படும். சுற்றுலா,
 

ஆகஸ்ட் 1 முதல் என்னென்ன தளர்வுகள்: இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் பரிந்துரை

ஊரடங்கு உத்தரவு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஆகஸ்ட் 1 முதல் அன்லாக் 3.0 ஆரம்பமாகவுள்ளது. இந்த ஒரு மாதத்தில் என்னென்ன தளர்வுகள் தரலாம் என இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை சில பரிந்துரைகளை செய்துள்ளது.

  • வெளிநாட்டினரை இந்தியர்களை அனுமதிக்கலாம். அவர்களிடம் கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் தனிமைப்படுத்துதல் தேவையில்லை
  • வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு அரசு, கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழை வழங்க வேண்டும். இந்த சான்றிதழ்கள் மற்ற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • சுற்றுலா, நினைவுச்சின்னங்கள், சுற்றுலா தலங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பார்களை திறக்கலாம்
  • திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு ஹோட்டலில் அனைத்து வகையான விருந்து மற்றும் கான்பரன்ஸ் நடத்துவதற்கு அனுமதி வழங்கலாம்
  • தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கலாம். ஆனால் தியேட்டருக்குள் நுழையும்போது கட்டாயமாக காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். தியேட்டர்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். போதுமான நேர இடைவெளியுடன் திரைப்படங்களை திரையிட வேண்டும். டிக்கெட்டுகள் டிஜிட்டல் முறையில் மட்டும் வழங்க வேண்டும்

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை மேற்கண்ட பரிந்துரைகளை செய்துள்ள நிலையில் இவைகளை மத்திய அரசு அப்படியே அறிவிக்குமா? அல்லது திருத்தம் செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web