இந்தியாவின் அலுவல் மொழிகள் என்னென்ன? வைகோ கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில்

 

இந்தி, ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படும் என்றும் வேறு மொழிகளை இந்தியாவின் அலுவல் மொழியாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் வைகோவின் கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழ் உள்பட ஒரு சில மாநில மொழிகளை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் அலுவல் மொழிகள் என்னென்ன? என்று வைகோ இன்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார்

இந்த கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமான பதில் ஒன்றை அளித்துள்ளது. அதில் இந்தியாவில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே அலுவல் மொழியாகும் என்றும் பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது 

இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளை அலுவல் மொழியாக்கும் சட்டத்திருத்தம் செய்யும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என மாநிலங்களவையில் வைகோவின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்காது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பதில் தனக்கு அதிருப்தி அளித்ததாக வைகோ கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web