அரையாண்டு தேர்வுகள் நடத்த என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த கல்வி ஆண்டில் ஏற்கனவே காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து என அறிவித்தார் 

ஆனால் அதேநேரத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

exam

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. இதன்படி ஏற்கனவே ஆன்லைன் வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே தேர்வை நடத்த வேண்டும் என்றும் அரையாண்டு தேர்வில் வரும் மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 

மேலும் அரையாண்டு தேர்வுக்காக மாணவர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது

From around the web