"நீட் தேர்வு"- என்ன ஒரு பல்டி தேர்தல்; அறிக்கையில் ஒன்று! நடப்பது வேறொன்று!!

நீட் தேர்வை தமிழக அரசை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்!
 
neet

தற்போதைய தமிழகத்தின் முதல்வராக உள்ளார் தளபதி ஸ்டாலின். மேலும் இவர் திமுக கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தமிழகத்தில் திமுகவின் ஆட்சி நடைபெறுகிறது . திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வரான போது தான் கூறியது வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வந்தார். மேலும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் நேரு, துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுப்பிரமணியன் போன்றோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவர் தலைமையில் உயர் கல்வித் துறை அமைச்சராக தற்போது உள்ளார் அமைச்சர் பொன்முடி.ponmudi

அவர் தற்போது நீட் தேர்வு விவகாரம் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி நுழைவுத்தேர்வை மாநில அளவில் நாங்களே நடத்திக் கொள்கிறோம் என நாங்கள் மத்திய அரசிடம் கூறினோம் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வை மத்திய அரசு நடத்தக்கூடாது என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசானது நீட் தேர்வு நிச்சயம் நடக்கும் என்றும் கூறுகிறது.

ஆனால் தமிழகம் அதனைத் தொடர்ந்து எதிர்க்கும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இவர்கள் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறி வந்த நிலையில் தற்போது தமிழகமே நீட் தேர்வு குறித்து நாங்கள் நடத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துகிறது.

From around the web