என்னப்பா  நாளுக்கு நாள் வேலூரை வெளுக்கும் வெயில்! அங்கு எவ்வளவு தெரியுமா வெயிலு?

தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது!
 
vellore

நம் இந்திய திரு நாட்டில் தற்போது கோடைகாலம் நிலவி வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இயல்பு நிலையை விட அதிகமாக சூரியனின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் மக்கள் அனைவரும் வெளியே செல்வது கூட மிகவும் தயங்கி வருகின்றனர். இந்த சூழலில் வானிலை ஆய்வு மையமும் மக்களுக்கு பல சோகமான தகவல்களை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இத்தகைய அதிகரிப்பு மக்களை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது.sun

 சென்னையை பொறுத்த வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அதோடு மட்டுமின்றி குடிநீர் பற்றாக்குறையும் அதிகமாக நிகழும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது. மேலும் பெரும்பாலும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் கோடை காலம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இத்தகைய சூழலில் தற்போது தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிகவும் பெயர் போன வேலூர் மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில்  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் வேலூரில் வெயிலின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. தற்போது தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் வெயிலின் பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web