மேற்குவங்க காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவுக்கு பலி: தேர்தல் நிறுத்தப்படுமா?

 
மேற்குவங்க காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவுக்கு பலி: தேர்தல் நிறுத்தப்படுமா?

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கொரோனா வைரசால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷாவுல் ஹக் என்பவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்றும், அவருக்கு வயது 46 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது

From around the web