டிரம்புக்கு விழுந்த தபால் ஓட்டுக்கள் எரிக்கப்பட்டதா? டிரம்ப் மகனின் வீடியோவால் பரபரப்பு!

 

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி மூன்று நாட்கள் ஆகிய பின்னரும் இன்னும் அமெரிக்க அதிபர் யார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத அளவிற்கு தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன 

இந்த நிலையில் இன்று இரவுக்குள் அல்லது நாளை கண்டிப்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜோ பைடன் எப்படியாவது அமெரிக்க அதிபர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிகளில் டிரம்ப் முயன்று வருகிறார் 

ஏற்கனவே நீதிமன்றம் சென்ற டிரம்ப், ஓட்டுக்களை எண்ண கூடாது என்றும், இதுவரை எண்ணிய ஓட்டுகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், மீண்டும் வாக்குகளை என்ன வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் டிரம்ப் மகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனது தந்தை ட்ரம்புக்கு வந்த தபால் ஓட்டுகள் எரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு ஓட்டுக்கள் குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் 

ஆனால் இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியபோது எரிக்கப்பட்டவை அனைத்துமே மாதிரி வாக்குச் சீட்டுக்கள் என்றும் தபால் ஓட்டுக்கள் அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளனர். டிரம்ப் மகனின் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web