அரசின் முடிவை வரவேற்கிறேன்… 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பல லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது, கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஜூன் 30 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்னும் 4 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஓரளவு குறைந்துள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள்ன. அந்தவகையில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் நடைபெறாமல் இருந்தநிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள்
 
அரசின் முடிவை வரவேற்கிறேன்… 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பல லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது, கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஜூன் 30 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்னும் 4 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஓரளவு குறைந்துள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள்ன.

அரசின் முடிவை வரவேற்கிறேன்… 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!!

அந்தவகையில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் நடைபெறாமல் இருந்தநிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என மாணவர்களும் பெற்றோர்களும் தவித்து வந்தனர். அந்தவகையில், ஜூன் 1 அன்று தேர்வுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் கொண்டு தேர்வு ஜூன் 15 க்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்தநிலையில் இன்று தமிழக முதலமைச்சர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததையடுத்து, மு.க.ஸ்டாலின், அரசின் முடிவை வரவேற்பதாய் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, “10 ஆம் வகுப்புத் தேர்வினை ரத்து செய்வதாக அரசு எடுத்த முடிவு சிறப்பான முடிவாகும், ஆனால்  இம்முடிவு காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவாக உள்ளது. 10 ஆம் வகுப்பு நடத்துவது குறித்து தொடர்ந்து குழப்பமான முடிவினை எடுத்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

இதனால் எந்தவொரு முடிவினையும் கலந்து ஆலோசித்து உடனடியாக எடுத்தல் வேண்டும்” என்று கூறியுள்ளார்.

From around the web