பாஜகவில் இணைந்த சகோதரி குஷ்புவை வரவேற்கிறோம்: எல் முருகன் 

 

சற்று முன்னர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார் என்ற செய்தியைப் பார்த்தோம். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை கொடுத்த தேசிய தலைவர் ஜேபி நட்டா அவருக்கு வாழ்த்து தெரிவித்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடும்படி கேட்டுக்கொண்டார்

இதனை ஏற்றுக்கொண்ட குஷ்பு தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார். இந்த நிலையில் குஷ்பு பாஜகவில் இணைந்ததற்கு பாஜகவின் தமிழக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 

இது குறித்து தமிழக பாஜக தலைவர்  எல் முருகன் அவர்கள் கூறியபோது ’குஷ்புவை முழுமனதுடன் வரவேற்கிறோம் என்றார். மேலும் பாஜகவில் இணைந்த சகோதரி குஷ்புவை வருக வருக என வரவேற்கிறோம் என்று முருகன் கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் உள்பட பலர் குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்களும் குஷ்புவின் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

From around the web