உதயநிதி ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் மலர்தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு!

ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிக்கும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் .அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

udhyanithi

இந்நிலையில் அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறா.ர் இந்த சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக களம் இறங்க  உள்ள ஸ்டாலினின் மகனான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதற்காக அவர்  வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவர் தான் போட்டியிடும் தொகுதியில் இன்று காலை ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் போற இடமெல்லாம் மக்களின் கூட்டம் நிரம்புகிறது. மேலும் அவர் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்ததார். மேலும் அவர் போகும் இடமெல்லாம் ஆரத்தி எடுத்து வரவேற்பு கிடைக்கிறது.மேலும் மாடியிலிருந்து மலர்கள் தூவியும் அவருக்கு சிறந்த வரவேற்பு கிடைக்கிறது.

From around the web