மக்களே உஷாரு; 13 மாவட்டங்களை வாட்டி வதைக்க காத்திருக்கிறது "வெயில்"

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலையை விட அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
sun

தற்போது நம் தமிழகத்தில் பல பகுதிகளில்  வெப்பதாக்கமானது இயல்பைவிட அதிகமாக காணப்படுகிறது. காரணம் என்னவெனில் தற்போது தமிழகத்தில் நடைபெறுவது மே மாதம் என்பதாலும் இது கோடைகாலம் என்பதால் தற்போது பல பகுதிகளில் இயல்பு வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பம் அதிகமாக உள்ளது. இதனால் தற்போது உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் இத்தகைய வானிலை நிகழ்வது மக்களுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்குகிறது என தொடர்ந்து தற்போது சென்னை வானிலை ஆய்வு மையமானது எரிச்சலான தகவல்களையும் கூறியுள்ளது.sun

அதன்படி தமிழகத்தில் இன்னும் சில தினங்களுக்கு 13 மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பம் இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்றும் அந்த மாவட்ட மக்கள் அனைவரும் எரிச்சலான சூழ்நிலை உணர்வர் என்றும் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுரை திருச்சி கிருஷ்ணகிரி தர்மபுரி ராணிப்பேட்டை சென்னை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலையானது அதிகரித்து வெப்பம் மனிதர்களை வாட்டி வதைக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சி சென்னை தர்மபுரி திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் வெப்பநிலையானது மிகவும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் இந்த பொது முடக்கத்தின் போதும் இத்தகைய வானிலை நிகழ்வது மேலும் எரிச்சலான சூழ்நிலையை உருவாக்கும் அதனால் மக்கள் மிகவும் துன்பப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

From around the web