நீட் தேர்வு வெளியான சில நிமிடங்களில் முடங்கிய வெப்சைட்!


 

 

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பிலும் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் உள்பட நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் சற்றுமுன் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியானது. 


ஆனால் நீட் தேர்வு முடிவுகளை பார்க்க ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வெப்சைட்டை அனைத்து மாணவர்களும் ஓப்பன் செய்ததால் ஒருசில நிமிடங்களில் நீட் தேர்வு வெளியிடப்படும் வெப்சைட் முடங்கியது என்பதும் அதன்பின் சில நிமிடங்களில் மீண்டும் அந்த வெப்சைட் சரியானது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

http://nta.ac.in மற்றும் http://ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் நீட் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web