பாலில் அரளிவிதை கலந்து குடித்த தறி தொழிலாளி குடும்பம்: ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பரிதாபம்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கானோர் வேலை இழந்து வருமானம் இன்றி உள்ளனர் என்பதும் அவர்களில் சிலர் தற்கொலை என்ற பரிதாபமான முடிவு எடுத்து உள்ளார்கள் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஊரடங்கால் வேலையின்றி வருமானம் இல்லாத காரணத்தினால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தறி தொழிலாளி ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம்பாளையம் கரிசல் காடு என்ற
 

பாலில் அரளிவிதை கலந்து குடித்த தறி தொழிலாளி குடும்பம்: ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பரிதாபம்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கானோர் வேலை இழந்து வருமானம் இன்றி உள்ளனர் என்பதும் அவர்களில் சிலர் தற்கொலை என்ற பரிதாபமான முடிவு எடுத்து உள்ளார்கள் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஊரடங்கால் வேலையின்றி வருமானம் இல்லாத காரணத்தினால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தறி தொழிலாளி ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம்பாளையம் கரிசல் காடு என்ற பகுதியை
தறி தொழிலாளிசுப்பிரமணியன். இவருக்கு மேனகா என்ற மனைவியும் பூஜாஸ்ரீ, நவீன் ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தறி தொழிலாளி சுப்பிரமணிக்கு கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி உள்ளனர். குழந்தைகளின் பசியை அவரால் தாங்க முடியாமல் இருந்தது. இதனை அடுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்

பாலில் அரளி விதையை அரைத்துக் கலந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் குடித்துள்ளனர். இதில் தறி தொழிலாளி சுப்பிரமணி மற்றும் அவருடைய மனைவி மேனகா உயிரிழந்தனர். மகள் பூஜாஸ்ரீ மற்றும் மகன் நவீன் ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை காரணமாக தறி தொழிலாளி குடும்பமே தற்கொலைக்கு முயன்று உள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web