மகிழ்ச்சியோடு சோகத்தை அள்ளிக்கொடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் மற்றும் புதுவை காரைக்காலில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!
 
மகிழ்ச்சியோடு சோகத்தை அள்ளிக்கொடுத்த வானிலை மையம்!

மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்துடன் காணப்படும் காலநிலை ஆக இந்த கோடைகாலம் காணப்படும். தமிழகத்தில் கோடை காலம் ஆனது சில தினங்களுக்கு முன்பாக தொடங்கியது.மேலும் கோடை காலம் தொடங்கி, இதன் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் வெயிலின் தாக்கமானது இயல்பைவிட அதிகமாக காணப்படுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் வெயிலில் இயல்பு வெப்பநிலையானது அதிகமாக காணப்படும் மக்களுக்கு எரிச்சல் கொடுத்துள்ளது. மேலும் பல பகுதிகளில் வெக்கை காற்றும் வீசி மக்களுக்கு மிகவும் எரிச்சலை கொடுத்துள்ளது.weather

இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த உஷ்ணமான சூழ்நிலையை உணர்கின்றனர். வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. ஆனால் இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பற்றிய வானிலையும் மக்களுக்கு மோசமாக காணப்படுகிறது. அதன்படி தமிழகத்தின் இதர மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்காலில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறியுள்ளது.

மேலும் சென்னை முதல் குமரி வரை கடலோர மாவட்டங்களில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் ஈரப்பதம் குறைவதால் பிற்பகல் முதல் மறுநாள் காலை வரை அதிகரித்து புழுக்கமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பான அளவைவிட 5 டிகிரி செல்சியஸ் அளவு அதிகரிக்கும் என்றும் கூறி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web