பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்: பிரபல தலைவர்களுக்கு மம்தா எழுதிய கடிதம்!

 
பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்: பிரபல தலைவர்களுக்கு மம்தா எழுதிய கடிதம்!

பாஜகவிடம் இருந்து நாட்டையும் நாட்டில் உள்ள மாநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல பிரபலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும் பாஜகவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சரத்பவார், தேஜஸ்வி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

stalin

அந்த கடிதத்தில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு ஆளுநர் மூலம் பிரச்சனை கொடுக்கிறது மத்திய அரசு என்றும் ஆளுநர்கள் பாஜக உறுப்பினர்கள் போலவே செயல்பட்டு வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்

மேலும் அரசியல் காரணங்களுக்காக சிபிஐ, அமலாக்கத் துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்றும் இதற்கெல்லாம் முடிவுகட்ட பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் சாசனத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web